பதிவு செய்த நாள்
07
பிப்
2017
02:02
குளித்தலை: ராஜேந்திரம் குள்ளமுத்து மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் குள்ளமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரியாற்றில் இருந்து, புனிதநீர் எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் மூன்றுகால யாக பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, நேற்று காலை, 7:20 மணியளவில், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், குளித்தலை, ராஜேந்திரம், மருதூர், குமாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், கருப்பத்தூர் செங்குட்டுவேல் குருக்கள் தலைமையில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, புணவாசிப்பட்டி, வல்லம், கொம்பாடிப்பட்டி, மகாதானபுரம், மேல சிந்தலவாடி, நந்தன்கோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.