பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஹயக்ரீவர் யாகம் நடந்தது. சதுர்வேத பண்டிட் சாம்ராட்டுகள் மற்றும் வேத விற்பன்னர்கள் இணைந்து, பொள்ளாச்சி கரியாஞ்செட்டிபாளையத்திலுள்ள கிருஷ்ண பிரேமை மடத்தில், நான்காம் ஆண்டாக ஹயக்ரீவர் யாகம் நடத்தினர். குழந்தைகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்தி பெறவும், தொழில் விருத்தியடையவும் லட்சுமி ஹயக்ரீவர் யாகம், நடந்தது. கிருஷ்ணானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். சென்னை விஷ்ணு பிருத்தியங்கிர தந்திரிகப்பீடத்தின் அறங்காவலர் யோகினி சாந்தியம்மாள் துவக்கி வைத்தார். யாக விழாவில், 50 சான்றோருக்கு வாழ்நாள் ஆன்மிக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. யாக பூஜையில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.