பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
சின்னதாராபுரம்: சின்னதாராபுரம் மாசாணி அம்மன் கோவிலில், மாசி மாத பூக்குழி திருவிழா வரும், 12ல் நடக்கிறது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த எல்லமேட்டில், மாசாணி அம்மன் கோவிலில், பூக்குழி திருவிழா முளைப்பாரி நிகழ்ச்சியுடன் கடந்த, 27ல் துவங் கியது. தொடர்ந்து நாள்தோறும், மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனைகள் நடந்து வருகிறது. வரும், 11ல் பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் நடக்கிறது. அடுத்த நாளான, 12ல், காலை, 11:00 மணியளவில், அக்னி கரகம் எடுத்தல், சக்தி அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.