பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
கரூர்: வேலாயுதம்பாளையம் புகழிமலையில், தைப்பூசத் தேர்த்திருவிழாவுக்காக, தேரை தயார்ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா கடந்த, 1ல் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும், சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. நாளை தைப்பூசம் என்பதால், அன்றைய நாளன்று, மதியம், 3:30 மணியளவில், தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, மரத்திலான தேரை புதுப்பிக்கும் பணியை, நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும், புகழிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூச விழாவுக்கு வருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிகளை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.