பதிவு செய்த நாள்
13
பிப்
2017
10:02
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, ஜன., 27ல் துவங்கியது. பிரசித்தி பெற்ற குண்டம் இறங்கும் விழா, நேற்று காலை நடந்தது. தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் ஆகியோர், அம்மன் சூலத்துடன், குண்டம் இறங்கும் இடத்துக்கு வந்து, துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். டி.எஸ்.பி., முத்துராஜன் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை, கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், நாளை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.