திருவேடகம்: சோழவந்தான் திருவேடகம் ஏடகநாதர் சுவாமிகோயிலில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழாவில் பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இங்கு தைபூசத்தை முன்னிட்டு பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. நேற்றுமுன்தினம் இரவு இத்திருவிழா நடந்தது. லை அம்மன்சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் பரசுராமர், கணேசன் பல்வேறு அபிஷேக, தீபாராதனைகள் செய்தனர். அம்மன்சுவாமி சப்பரத்தில் தெப்பக்கரையில் எழுந்தருளினர். இரவு பெண்கள் பங்கேற்ற திருவிளக்குபூஜை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பர மின்விளக்கு அலங்காரத்தில் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர்சுவாமி பக்தர்கள் புடைசூழ பிரம்மதீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.சுவாமியை தரிசித்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாகுழு நிர்வாகிகள் நடராஜன், ஆதிராமன், தேவகுமார், மோகன், கோயில் அறங்காவலர் சேவுகன், நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் மற்றும் ஆலயபணியாளர்கள் செய்திருந்தனர்.