பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
பழநி: பழநி மலைக்கோயிலில் காவடிகள், பால் குடங்கள், அலகு குத்தி குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான நேற்று கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, இடைப்பாடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், மயில், மலர், இளநீர் காவடிகள், பால்குடங்கள் எடுத்து வந்து கிரிவலம் வந்தனர். பின்பு மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. இதனால் கிரிவீதி முழு வதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆக்கிரமிப்பு கடைகளால் அலகு குத்தி வந்த பக்தர்கள் கிரிவலம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம் கட்டணம், பொதுதரிசன வழியில் மணிநேரம் காத்திருந்து மூலம் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். இதைப்போல இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.