பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
மல்லசமுத்திரம்: காளிப்பட்டியில், தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, நேற்று சத்தாபரண மகாமேரு நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில், தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, விழா தொடங்கிய எட்டாம் வசந்த விழாவான நேற்று, வாணவேடிக்கையுடன், சத்தாபரண மகாமேரு நடந்தது. இதில், அலங்கரிக்கபட்ட சிறய தேரில், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இத்தேர், கோவிலை சுற்றி வலம் வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா எனும் கோஷம் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியாக, கோவில் முன்பாக, தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கபட்ட மின் பல்லக்கில் சுவாமியின் திருவீதி உலா நடந்தது.