Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பெண்களால் நன்மை பிள்ளைகளால் பெருமை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பெண்களால் நன்மை பிள்ளைகளால் பெருமை!

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
12:02

பரந்த மனப்பான்மை கொண்ட  மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். புதன் பிப்.16 வரை சாதகமாக இருந்து  நன்மை தர காத்திருக்கிறார். சந்திரனால் பெரும்பாலான நாட்கள் நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நற்பலன் குறையாது. மனதில் நினைத்த விஷயங்களை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். ராகுவால் தொழிலில் குறுக்கிடும் தடைகளை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு, மார்ச் 10ல்  வக்கிரம் அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபவிஷயத்தில்  எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  குடும்பத் தேவைகள் தாராள செலவில்  பூர்த்தியாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். பெண்களால்  பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். பிப்.24,25ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனால் மார்ச் 6,7ல் அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். விலகியிருப்பது நல்லது. மார்ச் 4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.  பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள்.  பிப்.28, மார்ச் 1ல்  எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.  உடல்நிலை சீராக இருக்கும். கடந்த காலத்தில் இருந்த மருத்துவச் செலவு இனி இருக்காது.

தொழில், வியாபாரத்தில் ஆதாயம் மாதத் தொடக்கத்தில் சிறப்பாக இருக்கும். பிப்.16க்கு பிறகு மறைமுகப் போட்டி குறுக்கிடலாம். சூரியனால்  வீண் அலைச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் ராகு,சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால்  லாபத்திற்கு குறைவிருக்காது. தொழிலாளர் பிரச்னைக்கு சுமுகத்தீர்வு கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பிப்.26,27, மார்ச் 2,3ல் சந்திரனால் திடீர் விரயம் ஏற்படலாம். பிப்.13, மார்ச் 11,12ல் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டவசமாக ஆதாயம் கிடைக்கும். பிப்.26க்குப் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்கள்  சீரான வளர்ச்சி காண்பர். மாதத் தொடக்கத்தில் மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். சூரியனால்  திடீர் இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். பிப்.21,22,23ல் பணியிடத்தில் இனிய அனுபவம் உண்டாகும். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. பிப்.26க்கு பிறகு நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மார்ச் 5க்கு பிறகு முயற்சி எடுத்தால் மட்டுமே எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். மார்ச் 10க்கு பிறகு குருவால்  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. உங்கள் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு அதிகமிருக்கும்.

அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். மார்ச் 9,10ல் தொண்டர்கள் வகையில் செலவு செய்யும் நிர்ப்பந்தம் உண்டாகும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். மாதத்தின் பிற்பகுதியில் விடாமுயற்சி தேவைப்படும். குருவால் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மையளிக்கும்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். ஆனால், கடின உழைப்பு
தேவைப்படும். கால்நடை வளர்ப்பின் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். கடனில் பெரும்பகுதி அடைபடும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.       

பெண்கள் குடும்ப வாழ்வில் குதுõகலம் காண்பர். உங்களின் பங்களிப்பால் குடும்பம் வளர்ச்சி பெறும். பிப்.14,15 மார்ச் 13ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக செயல்படுவர். மார்ச் 10க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.  வியாபாரம் செய்யும் பெண்கள் சுக்கிரனால் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர்.

நல்ல நாள்: பிப்.13,14,15,21,22,23,24,25, 28, மார்ச் 1,4,5,11,12,13

கவன நாள்: பிப். 16,17,18 சந்திராஷ்டமம். இந்நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபடவும்.

அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: பெருமாள் கோவிலில் விளக்கேற்றி வணங்குங்கள். ராமரை வழிபடுவது சிறப்பு. கேதுவுக்கு அர்ச்சனை செய்வது அவசியம். சனிபகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும். காலையில் சூரியனை வழிபட்டால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar