பதிவு செய்த நாள்
22
அக்
2011
05:10
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கந்தசஷ்டியை ஒட்டி அக்.,31 ல் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி, பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் இரு இடங்களில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது: இக்கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.,26 ல் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில்16,000 சதுர அடியில் தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் நடக்கும் யாகசாலை பூஜை, அபிஷேகம் உள்ளிட்டவை 20 "டிவிக்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இதுபோல, அக்.,31 ல் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் நெரிசலின்றி காண, ஜெயந்திநாதர் விடுதி மற்றும் வேலவன் விடுதிகளின் அருகே பெரிய வண்ணத்திரையில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது, என்றார்.