திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில், திருவாவடுதுறை ஆதீன சைவத் திருமுறை பயிற்சி துவக்க விழா நடந்தது. திருக்கோவிலுார்‚ பாலமுருகன் கோவிலில்‚ நடந்த பயிற்சியை, திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, முத்துராணி தலைமை தாங்கினார். அமைப்பாளர் லட்சுமி வரவேற்றார். சிவ பக்தர் பானுமதி இறைவணக்கம் பாடினார். தேவஆசைத்தம்பி சிறப்பு சொற்பொழிவாற்றினார். இதில் பொன்னி‚ லலிதா‚ சுகந்தி‚ ஓதுவார் வசந்தி‚ முத்துக்குமரன்‚ கண்ணன்‚ திருமலை உட்பட பலரும் பேசினர். துணை அமைப்பாளர் வான்மதி நன்றி கூறினார்.