காங்கேயம்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் அக்டோபர் 27ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்குகிறது.காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. 27 முதல் 30ம் தேதி வரை தினமும் காலை 10.30க்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, பகல் 11 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனை, திருவீதியுலா நடக்கிறது. 31ம் தேதி, காலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 1ம் தேதி காலை 10.30க்கு அபிஷேக ஆராதனை, திருவீதியுலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி காலை 10.30க்கு அபிஷேக ஆராதனை, திருவீதியுலா நடக்கிறது. மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனை திருவீதியுலா நடக்கிறது.தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஸ்வாமி திருமலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நடராஜன், தக்கார் பழனிக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.