குன்னுார்: குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவி லில், பைரவருக்கு அஷ்டமி பூஜை நடந்தது. குன்னுார் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பைரவருக்கு சிறப்பு ஹோமம், வழிபாடுகள், அர்ச்சனை ஆராதானை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், விளக்குகளை ஏற்றி வழிபாடுகளை நடத்தினர். விழாவில், பிரசாத வினியோகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர் குணா சாஸ்திரி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.