பொள்ளாச்சி: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி தாடகைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை, சரபேஸ்ரவர், காலசம்ஹார பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை, 11:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கும், 16 வகையான அபிேஷகம் மற்றும் சோடச உபசார பூஜை பைரவருக்கு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூசணிக்காய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.