பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
ஊட்டி: ஊட்டி திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில், பழமையான கொடி மரம் மாற்றியமைக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள இருதய ஆண்டவர் தேவாலயம், பழமையானது; பிரசித்தி பெற்றது. இத்தேவாலயத்தின் முகப்பில் உள்ள கொடி கம்பம், பழையதாக இருந்ததால், அவற்றை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், 44 அடி உயரமுள்ள புதிய கொடி மரம், தேவாலய முகப்பில், நேற்று நடப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தேவாலய பங்கு குரு ஜார்ஜ் ஜோசப் தலைமையில் நடந்த ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலியை தொடர்ந்து, புதிய கொடி மரம் நடப்பட்டு, சிறப்பு ஆராதனை ஏறெடுக்கப்பட்டது. இதில், திரளாக, பங்கு மக்கள் பங்கேற்றனர்.