பதிவு செய்த நாள்
21
பிப்
2017
12:02
ஈரோடு: காவிரியாற்றின், தென் திசையில் கோவில் கொண்டிருக்கும், ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன், கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. வரும், மார்ச் 5ல், காவிரி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம், பாலபிஷேகம், அதைத் தொடந்து அக்னி கபாலம் ஊர்வலம், நடக்கிறது. மார்ச், 8 அதிகாலையில், குண்டம் இறங்குதல் நடக்கிறது. மேலும், பொங்கல் வைத்தல் மற்றும் மாலை அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவுக்காக நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில் மட்டும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும், குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் காணிக்கைச் செலுத்தி, கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். பாலாபிஷேகம், பால்குட ஊர்வலகத்தில் பங்கேற்கும் பக்தர்களும் குண்டத்திற்கு கரும்பு வாங்கி போடும் பக்தர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.