புதுச்சேரி: அன்னை பிறந்த நாளை ஒட்டி, புதுச்சேரி அரவிந்தர் ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.அரவிந்தர் ஆசிரம அன்னையின், 139வது பிறந்த நாளை ஒட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறைகள், பக்தர்களின்தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டன. அன்னையின் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, அன்னையின் சமாதியில் மலர் துாவி வழிபட்டனர்.