பதிவு செய்த நாள்
22
பிப்
2017
11:02
சிதம்பரம்: மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் இரு இடங்களில் நாட்டியாஞ்சலி விழா, வரும், 24ம் தேதி துவங்குகிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், தெற்கு வீதி ராஜா அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில், நாட்டியாஞ்சலி விழா வரும், 24ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. என்.எல்.சி., மனிதவள இயக்குனர் விக்கிரமன், குச்சுப்புடி நடன கலைஞர் மஞ்சு பார்கவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கின்றனர். சென்னை காமகலா அபிநவகேந்திரா நடன பள்ளி மாணவியரின் பரதத்துடன் நாட்டியாஞ்சலி துவங்குகிறது. மற்றொரு நாட்டியாஞ்சலி: சிதம்பரம் சபாநாயகர் கோவில், பொது தீட்சிதர்கள் தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 24ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு, ராமலிங்கம் தீட்சிதர் தலைமை தாங்குகிறார். தொழிலதிபர்கள் கிளீவ்லேண்ட் சுந்தரம், நல்லி குப்புசாமி செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைக்கின்றனர்.