பதிவு செய்த நாள்
22
பிப்
2017
12:02
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டேஸ்வரர்கோவிலில், சிவராத்திரி விழாவை ஒட்டி, உற்சவர் சிவபெருமான் மற்றும் அம்மன் ஆகியோர், பூத வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், கடந்த, 16ல், சிவராத்திரி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்றைய தினம், கிராம தேவதைக்கு சிறப்பு பூஜை, வினாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் இரண்டாம் நாள், 17ல், உற்சவர் சிவபெருமான், அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு வாகனத்திலும், 18ல், சந்திரபிரபை வாகனத்திலும், 19ல், காமதேனு வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நேற்று, பூத வாகனத்தில், உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, யாகசாலை பூஜைகள், பஞ்சமூர்த்தி அபிஷேகம், அரிகதை, அன்னமாச்சார்யா கீர்த்தனைகள், கோலாட்டம் ஆகியவையும் நடந்தன.
தேதி கிழமை நேரம் நிகழ்ச்சி:
பிப்., 21 (செவ்வாய்) மாலை, 6:00 மணி-அதிகார நந்தி வாகனம்
பிப்., 22 (புதன்) மாலை, 6:00 மணி-கஜ வாகனம்
பிப்., 23 (வியாழன்) மாலை, 6:00 மணி-அஸ்வ வாகனம்
பிப்., 24 (வெள்ளி) மாலை, 4:00 மணி 6:00 மணி-பிரதோஷ விழாமாலை, ரிஷப வாகனம் இரவு, 7:00 மணி பரதநாட்டியம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால யாக பூஜைகள் நடைபெறும்
பிப்., 24 (வெள்ளி) மாலை, 6:00 மணி முதல்கால யாக பூஜை&இரவு, 9:00 மணி.
இரண்டாம் கால யாக பூஜை-நள்ளிரவு, 12:00 மணி.
மூன்றாம் கால யாக பூஜை
பிப்., 25 (சனி) அதிகாலை, 4:00 மணி.
நான்காம் கால யாக பூஜை மாலை, 6:00 மணி. கல்பவிருட்ச வாகனம்
பிப்., 26 (ஞாயிறு) காலை 7:00 மணி நடராஜ சுவாமிக்கு அபிஷேகம்
காலை, 9:00 மணி கலசாபிஷேகம் மாலை, 4:00 மணி த்வஜா அவரோகணம் மாலை, 4:30 மணி உற்சவம், பிராயச்த்த பூஜை, சாந்தி ஹோமம் மாலை, 6:00 மணி ராவணாசூர வாகனம்.