அமைதியான உலகம் வேண்டுமென்றால், அமைதியான மனிதர்கள் தேவை. அன்பான உலகம் வேண்டுமென்றால், அன்பான மனிதர்கள் தேவை. புத்திசாலித்தனமான உலகம் வேண்டுமென்றால், இன்னும் புத்திசாலித்தனமான மனிதர்கள் தேவை. உடன் வாழ விரும்பும் விதமான மனிதர்களை, உலகம் முழுவதும் நாம் பார்க்க விரும்பும் மனிதர்களை, நம் குழந்தைகள் அவர்களுடன் வாழக்கூடிய விதமான மனிதர்களை நாம் உருவாக்க விரும்பினால், அடுத்த 10, 12 ஆண்டுகளில், ஒவ்வொரு குழந்தையும் தன் பத்தாவது வயதைத் தாண்டும்முன் ஏழில் இருந்து பத்து நிமிடங்களாவது கண்மூடி அமர்ந்திருக்கும் விதமான ஏதோவொரு எளிமையான ஆன்மிக செயல்முறையைக் கற்றுகொள்ள வேண்டும், அதற்கான சூழ்நிலையை நாம்உருவாக்கவேண்டும்.