பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் நூற்றாண்டு மகா கந்தசஷ்டி பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2011 10:10
சிதம்பரம் : சிதம்பரம் பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் நூற்றண்டு மகா கந்தசஷ்டி பெருவிழா இன்று (27ம் தேதி) துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. சிதம்பரம் அருகே சீர்காழி மெயின்ரோட்டில் உள்ள பாம்பன் சுவாமிகள் மடாலய நூற்றாண்டு மகா கந்தசஷ்டி பெருவிழா இன்று (27ம் தேதி) துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. துவக்க நாளான்று காலை 4.30 மணிகர் வினாயகர் வேள்வி பூஜையும், 9.20 க்கு கொடியேற்றமும், காப்பணிதல், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. வரும்1ம் தேதி மகாபிஷேகமும், ஆடவர், மகளிர் கருவரை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 2ம் தேதி நூற்றாண்டு விழா மலர் வெளியீடு மற்றும் சொற்பொழிவு நடைபெற உள்ளது. இரவு ஆஸ்தான பூஜைகள் நடைபெறும். விழா நடைபெறும் 7 நாட்களும் தினமும் அன்னதானம், சிறப்பு அபிஷேகம், சாமி வீதியுலா நடக்கிறது.