திருக்கனுார் : கொண்டாரெட்டிப்பாளையம் செங்கேணியம்மன் கோவில் நுழைவு வாயில் மண்டபம் அமைக்கும் பணியினை செல்வம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். திருக்கனுார் அடுத்த கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் பழமையான செங்கேணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நுழைவு வாயில் மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன் கட்டுமான பணிகள் துவங்கியது. இதனையடுத்து, நுழைவு வாயில் மண்டபத்தின் மேல்தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனை தொகுதி எம்.எல்.ஏ., செல்வம் பூமி செய்து துவக்கி வைத்தார். இதில், கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.