பதிவு செய்த நாள்
23
பிப்
2017
12:02
திருத்தணி : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்,நாளை (24ம் தேதி)முதல், மாசி பிரம்மோற்சவம் துவங்கி, அடுத்த மாதம், 8ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம் மயானச்சூரை பிரம்மோற்சவம் வெகு விமர்சிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, நாளை (24ம் தேதி)பெரியாண்டவர் பூஜையுடன் துவங்குகிறது. இம்மாதம், 25ம் தேதி கொடி ஏற்றுதல், சிவராத்திரி கரக ஊர்வலமும், 26ம் தேதி சிங்க வாகனத்தில் மயானச்சூரை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, அடுத்த மாதம், 8ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும், மூலவர் அம்மனுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.