பரவை : மதுரை அருகே பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தனர். கோயிலில் திருவிழா அக்.20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகை ஆற்றில் கரகம் எடுத்து, வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்தனர். கோயில் விழா குழு நிர்வாகி மனோகரன் அக்கினிச்சட்டி எடுக்கும் பக்தர்களுக்கு மஞ்சள்நீர், குங்குமத்தை வழங்கினார். பாடகி முனியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தனர். கோயில் தலவரலாறை ஆராய்ச்சியாளர் முத்துமணி வெளியிட்டார். காளை வாகனத்தில் அம்மன் சர்வ அலங்காரத்தில் பவனி வந்தார். கமிட்டி நிர்வாகிகள் முருகையா, ஜெயமணி, செல்லமணி, நாகமலை ஏற்பாடுகளை செய்தனர்.