தெப்பக்குளம் நீரை மறுசுழற்சி செய்ய பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2017 12:02
ஓசூர்: ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலில், வரும், 12ல் தேர்த்திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள், தேர்ப்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் நீராடுவது வழக்கம். அத்துடன் தெப்ப உற்சவமும் நடக்கும். ஆனால், தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுவதால், திருவிழா நேரத்தில் தெப்பக்குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெப்பக்குளத் தண்ணீரை, மோட்டார் மூலம் பம்ப் செய்து, மறு சுழற்சி செய்ய வேண்டும் அல்லது புது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.