விழுப்புரம் : விழுப்புரம் அமைச்சார் அம்மன் கோவிலில் கேத்தார கவுரி நோன்பு நடந்தது. விழுப்புரம் மந்தக்கரை அருகே உள்ள மழுக்கரை மேய்ந்த மாரியம்மன் (அமைச்சார் அம்மன்) கோவிலில் தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கேத்தார கவுரி நோன்பு நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலை நோன்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் நோன்பு எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.