Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயிலில் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை: அமராவதி ஆற்றில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநி அருகே 12ம் நூற்றாண்டு தடுப்பணை: அமராவதி ஆற்றில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

01 மார்
2017
11:03

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி சாமிநாதபுரம் அருகே தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், சேரல் பொழிலன் ஆகியோர் களஆய்வு செய்தனர். அதில் அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி., 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட தடுப்பணை கல்வெட்டு ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக, கேரள எல்லை மஞ்சம்பட்டியில் உருவாகும் அமராவதி ஆறு 282 கி.மீ.,துாரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. சாமிநாதபுரம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் கி.பி.,12ம் நுாற்றாண்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.,1157ல் கொங்கு சோழ மன்னன் வீரநாராயணன் ஆட்சிக்காலத்தில், இந்த தடுப்பணையை கடத்துார் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து கட்டியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தடுப்பணையின் பெரும்பகுதி அழிந்துவிட்டன. எஞ்சியுள்ள சிறிய பகுதிகளே தற்போது உள்ளன.தடுப்பு அணையின் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்ட மதகு வாய்க்கால் இன்றும் அழியாமல் உள்ளது. இந்த வாய்க்கால் செங்கற்களை அடியில் வைத்து அதன்மேல் பாறாங்கற்களை வைத்து வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த பழங்கால கட்டட தொழில்நுட்பம் குறித்து வேறு பதிவு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar