வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர். குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம் மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.