பராமரிப்பு பணிக்காக பழநி மலைக்கோயில் வின்ச் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2017 12:03
பழநி: பழநி கோயில் முதலாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பழநி அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் செல்ல, 3 வின்ச்கள் இயக்கப்படுகிறது. காலை 5:00மணி முதல் இரவு 10:00 மணிவரை இயக்கப்படும் வின்ச்கள் மூலம், 8 நிமிடத்தில் மலைக்கோயிலை அடையலாம். இவற்றின் பாதுகாப்பான இயக்கத்திற்காக, மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.முதலாம் வின்ச் பராமரிப்பிற்காக நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் வின்ச் பாகங்களான கம்பிவடம், உருளை போன்றவற்றின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப சீரமைப்பு பணிகள் நடக்கும். பணி முடித்து ஓரிரு நாட்களில் வின்ச் வழக்கம்போல இயங்கத்துவங்கும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.