செஞ்சி: செஞ்சி தாலுகா முக்குணம் கிராமத்தில் உள்ள மலை கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முக்குணம் கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, கோவிலுக்கு திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.