பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
ஆர்.கே.பேட்டை: மாசி தேர் திருவிழாவை தொடர்ந்து, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு, நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, குதிரை வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். 25ம் ஆண்டு மாசி தேர் திருவிழா, கடந்த புதன் கிழமை நடந்தது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், குதிரை வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.