பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
ஆர்.கே.பேட்டை: வங்கனுார் சின்ன குளக்கரையில் அமைந்து உள்ள ஆத்ம லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.வங்கனுார் - மத்துார் சாலையில் உள்ள சின்ன குளக்கரையில் அமைந்துள்ளது, ஆத்ம லிங்கேஸ்வரர் கோவில். பல ஆண்டுகளாக சீரழிந்து கிடந்த இந்த கோவில், பக்தர்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது.குளக்கரையில் உள்ள ஆத்ம லிங்கேஸ்வரர் மற்றும் பிரசவ நந்திதேவர் சிலைகள், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாளை காலை கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அதற்கான பூஜைகள் இன்று துவங்குகின்றன. கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சமயத்தில், குழந்தை நல்லபடியாக பிறக்க, இந்த கோவிலில் உள்ள, சிவனை நோக்கி வீற்றிருக்கும் நந்தி சிலையை, எதிர் திசையில் திருப்பி வைப்பது வழக்கம்.சுகப்பிரசவம் நடந்ததும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு, மீண்டும், சிவனை நோக்கி நந்தியை திருப்பி விடுவர். இதன் காரணமாக, இந்த கோவில் சிறப்புற்று விளங்குகிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேகம், நாளை காலை, 6:00 மணிக்கு, நடக்கிறது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது.