பதிவு செய்த நாள்
14
மார்
2017
12:03
மோகனூர்: மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். மோகனூர் அடுத்த, தீர்த்தம்பாளையம் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, கடந்த, 6ல் துவங்கியது. நாள்தோறும், அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. கடந்த, 11ல் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு மணப்பள்ளி காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, ஊர்வலமாக வந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு, மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.