கடலாடி வனப்பேச்சியம்மன், ராக்காச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2017 12:03
கடலாடி:கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள வனப்பேச்சியம்மன், ராக்காச்சியம்மன், கொண்டன உடைய அய்யனார் உட்பட 21 பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் மாசிக்களரி விழா கோலாகலமாக நடந்தது. மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இருநாட்கள் நடந்த சிறப்பு பூஜையில் பெண்கள் பொங்கலிட்டனர். ஆடு, கோழி பலியிடப்பட்டது. பூஜகர் சண்முகசுந்தரம் பூஜைகளை செய்தார். மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குலதெய்வ குடிமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.