கோடை தொடங்கியதால் குமரி பகவதி அம்மனுக்கு பானகம் படைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2017 05:03
நாகர்கோவில்: கோடை தொடங்கியதால் கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு பானகம் படைத்து பூஜை தொடங்கியது. மே இறுதி வரை இந்த பூஜை நடைபெறும். பங்குனி, சித்திரை மாதங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மனிதர்கள் இளநீர், நொங்கு, மோர், தர்பூசணி போன்றவற்றை சாப்பிட்டு கோடையின் தாக்கத்தை குறைப்பர். இதுபோல கோயில்களிலும் இறைவனின் சூட்டை தணிக்க பல்வேறு நிவேத்யங்கள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று முதல் பானகம் நிவேத்யம் நடைபெறுகிறது. சர்க்கரை, எலுமிச்சைபழம், புளி, ஏலம், சுக்கு போன்றவை பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. மே இறுதி வரையிலும் பானகம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.