காளையார்கோவில், காளையார்கோவில் திருநகர் ஜெக முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மார்ச் 13ம் தேதி கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. இரண்டாம் கால யாக சாலை பூஜை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.10:00 மணிக்கு வீரமணி சாஸ்திரிகள் தலைமையிலான குழு வேதமந்திரங்கள் முழங்க கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.10:30 மணிக்கு மூலஸ்தான கும்பாபிேஷகம் நடந்தது. 11:00 மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை திருநகர் விழாக் குழுவினர்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.