சங்கராபுரத்தில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2017 01:03
சங்கராபுரம்: மழைவேண்டி முஸ்லீம்கள், சிறப்பு தொழுகை நடத்தினர். சங்கராபுரம் நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே, பேரூராட்சி முலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதையடுத்து மழைவேண்டி, சங்கராபுரம் ஏரியின் மையப்பகுதியில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். கடந்த 18 ம் தேதி காலை 11:00 மணி முதல் அரை மணி நேரம், வெயிலில் சிறப்பு தொழுகை நடந்தது. முத்தவள்ளி ஆசிம் தலைமை தாங்கினார். இதில் சங்கராபுரம் நகர அனைத்து ஜமாத்தார்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்துக் கொண்டனர்.