பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள குமரசுப்ரமணிய சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கோயில் கும்பாபிஷேகம் பிப்.,3 ல் நடைபெற்று தொடர்ந்து 44 நாட்கள் அபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக நிறைவாக 45 வது நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கணபதி பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நிறைவடைந்தது. காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலிக்குப் பின் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை 6 மணிக்கு உற்சவர் யானை வாகனத்தில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.