பழநி, பழநி முருகன்கோயிலுக்கு உட்பட்ட உபகோயில்கள் உண்டியலில் ரூ. 19.82 லட்சம் வசூலாகியுள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்குப்பட்ட திருஆவினன்குடி, பெரிய நாயகியம்மன் உள்ளிட்ட உபகோயில்கள் உண்டியல் வசூல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 70கிராம், வெள்ளி 720 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 121 கிடைத்துள்ளது. ரொக்கமாக ரூ. ஒருகோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 178ம், ரொக்கமாக ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 875 வசூலாகியுள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், வங்கிப் பணியாளர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.