மயிலம்: மயிலம் மயிலியம்மன் கோவிலில், ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து, படையலிட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று, மாலை ஊஞ்சல் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது.