பதிவு செய்த நாள்
30
மார்
2017
02:03
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவிலில் 14ம் ஆண்டு பிரம்மோற்சவம், வரும் 1ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி, மிஷன் வீதியில், செட்டிக்கோவில் என அழைக்கப்படும், காளத்தீஸ்வரர்- வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரருக்கு, 14ம் ஆண்டு பிரமோற்சவம், வரும் 1ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை நடக்கிறது. வரும் 2ம் தேதி, காலை 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்குகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், தினமும் காலை, மாலையும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 6ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:30 மணி வரை, திருக்கல்யாணம், 10ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.