தேவாரம் அவனாசி ஈஸ்வரன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2017 02:03
தேவாரம்:
தேவாரம் அவனாசி ஈஸ்வரன் கோயிலில் நடந்த திருவாசகம் முற்றோதுதல்
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவாரம் சின்னதேவி
கண்மாயின் கீழ்ப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான அவனாசி ஈஸ்வரன் கோயில்
உள்ளது. சிதிலமடைந்து கிடந்த இந்த கோயிலின் பழமை மாறாமல் சீரமைக்கும்
பணியில் தேவாரம் தெய்வீக பேரவையினர் ஈடுபட்டனர். நிதி பற்றாக்குறையால் பல
மாதங்களாக கட்டுமான பணி நடைபெறாமல் தொய்வடைந்தது. கோயில் கட்டுமான பணி
விரைவாக முடிக்க வேண்டி சின்னமனுார் தெய்வீக பேரவை தலைவர் ஜெயராமன்,
அமைப்பாளர் குருசாமி தலைமையில் உழவார பணிக்குழுவினர் திருவாசகம்
முற்றோதுதல் நடத்தினர். புலவர் ராஜமாணிக்கம், தேவாரம் தெய்வீக பேரவை தலைவர்
நாகராஜன், நிர்வாகி நாகநாதன் மற்றும் உழவார பணிக் குழுவினர் பங்கேற்றனர்.