சபரிமலை, பங்குனி உத்திர திருவிழா பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. மேல்சாந்தி குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தை தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்தார். பங்குனி உத்திர திருவிழா பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பொதுவாக மேல்சாந்திதான் நடை திறக்க வேண்டும். தற்போதைய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் சித்தப்பா இறந்ததை தொடர்ந்து அவருக்கு விலக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சன்னிதானத்தில் இருந்த அவர், கோயிலுக்கு தூரத்தில் உள்ள அறையில் மாற்றப்பட்டார். மாலை ஐந்து மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல் 10 நாட்கள் வழக்கமான பூஜைகளுடன் உற்வவம் தொடர்பான பூஜைகள் நடைபெறும். கொடிமர பணிகள் நடைபெறுவதால் கொடியேற்று மற்றும் ஆராட்டு நடைபெறாது. 9ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.