சத்தியமங்கலம்: குண்டம் திருவிழாவை ஒட்டி, பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வீதி உலா நேற்று தொடங்கியது பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் பூச்சாட்டு நடந்தது. இதை தொடர்ந்து உற்சவர் அம்மன் சப்பரத்தில் சுற்று வட்டார கிராமங்களில் திருவீதி உலா செல்வது வழக்கம். இதன்படி சத்தியமங்கலம் அருகே, இக்கரை நெகமம் புதூரில், நேற்று திருவீதி உலா நடந்தது. மதிய நேரம் வெள்ளியம்பாளையம், தயிர்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, கொத்தமங்கலம் வழியாக பவானிசாகர் பகுடுதுறை சென்றது. இரவில் முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையம் வேணுகோபாலசாமி கோவிலை சென்றடைந்தது.