பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
அரியானூர்: சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், அரியானூரில் உள்ள, மஹா சக்தி மாரியம்மன் கோவிலில், 30ம் ஆண்டு பொங்கல் விழா, நேற்று நடந்தது. அதில், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவில் முன் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். மாலை, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து வந்தும், அம்மனை வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு, அங்காளம்மன் - முருகர் நண்பர்கள் குழு சார்பில், இரண்டாம் ஆண்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, மஞ்சள் நீராடுதல், மாலையில், சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி நடத்தி, பரிசு வழங்கும் விழா நடக்கிறது.