பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதம் பூ மிதி விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா ஏப்., 4ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 6 இரவு, 10:00 மணிக்குமேல் கம்பம் போடுதல் நிகழ்ச்சி, 10 பின்னிரவு, 3:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் பூவோடு எடுத்தல், சாட்டையடி விழா நடக்கிறது. மறுநாள் காலை, 8:00 மணிக்கு பால்குடம் எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு மேல் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12 அதிகாலை பொங்கல் வைத்தல், காலை, 8:00 மணிக்கு பூ மிதித்தலும், 13 இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம் வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து, 15 காலை, 7:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மாரியம்மன் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.