பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 277 கிராம் தங்கம், 169 கிராம் வெள்ளி, 7.17 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழா, ஏப்., 21 முதல், மே 2 வரை நடைபெற உள்ளது. இந்த கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த, ஆறு இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் ரமணி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் உதவியுடன் எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த, 277 கிராம் தங்கம், 169 கிராம் வெள்ளி, 7 லட்சத்து, 17 ஆயிரத்து, 747 ரூபாய் உண்டியலில் இருந்தன.