பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
கரூர்: கரூரில், பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோவிலில், தங்கரத தேரோட்டத்துக்காக தரைத்தள இடிபாடுகளை அகற்றிவிட்டு, கான்கிரீட் பணிகள் துவங்கின.கரூர், மாரியம்மன் கோவில் அறங்காவலர் முத்துக்குமார் கூறியதாவது: தங்கத்தேர் இழுக்க, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு, ஒரு கட்டளைதாரர் மட்டும்தான், தங்கத்தேர் இழுத்து அவர்கள் குடும்பத்தினருடன் வழிபட முடியும். தங்கத்தேர் என்பதால், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, வாரத்தில் உள்ள ஏழு நாட்களிலும் பயன்படுத்த முடியாது. தங்கத்தேர் வலம் வரும் பகுதியில், சில இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுவதால், அதை முற்றிலுமாக அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் பணிகள், துவங்கியுள்ளன. மேலும், கோவிலில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.