திருச்செந்தூரில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2011 10:11
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் பக்தர்களு க்கு தேவையான அடிப்ப டை வசதிகள் மேம் படுத் தப்படும் என்று புதிய இø ண ஆணையர் தெரிவித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008 பிப்ரவரி முதல் இணை ஆணையராக பாஸ்கரன் பணியாற்றி வந்தார். இவர் நேற்று பழனி தண்டாயுதபாணி கோயிலில் இணை ஆணையராக பணி மாறுதலாகியுள்ளார்.. எனவே இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மதுரை மண்டல இணை ஆணையராக பணிபுரிந்த சுதர்சன் நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றார். இவர் நாமக்கல், சேர்ந்தமங்கலத்தை சேர்ந்தவர். புதிதாக பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்செந்தூர் கோயில் பழமை வாய்ந்தது. எனவே இக்கோயில் புகழை காப்பது மற்றும் பரப்புவது மட்டுமல்லாமல் கோயில் வருவாயை கூட்டுவதிலும் எனது பங்களிப்பு இருக்கும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குளிக்கும் இடம், தங்குமிடம், போன்ற வசதிகள் மேம்படுத்தப்படும். சுகாதாரப்பணிகள் மேலும் மேம்படுத்தப்படும். தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் சரி செய்ய அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அது மட்டுமல்லாது கோயில் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். 1996ல் நான் திருச்செந்தூர் வந்துள்ளேன். அப்போது பார்த்ததை விட கோயில் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இங்கு வந்துள்ள எனக்கு இது மிகவும் பெருமையை அளிக்கிறது. நான் நேற்று முன்தினம் நடந்த திருக்கல்யாண மாலை மாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் நிறைய அனுபவம் பெற்றுள்ளேன். யானைகள் முகாம் நடத்திய அனுபவம் உள்ளது. கோயிலின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு ஆக்ரமிப்புகள் ஏதும் இருந்தால் அகற்றி கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும். செக்யூரிட்டி வசதி மேம்படுத்தப்படும். பக்தர்களிடம் கோயில் பணியாளர்கள் மூலம் இன்முகத்துடன் வரவேற்கப்படுவர். கோயிலின் பெருமையும், புனிதமும் காக்கப்படும். இவ்வாறு கூறினார். அப்போது அவருடன் கோயில் துணை ஆணையர் செல்லத்துரை, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வரன், உதவி செயற்பொறியாளர் முருகன் உட்பட அலுவலர்கள் பலர் இருந்தனர்.