பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
12:04
குரோம்பேட்டை: சேலையூரை அடுத்த திருவஞ்சேரி, செல்வ விநாயகர், சீதா லஷ்மண அனுமந்த், கோதண்டராம சுவாமி கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலையூரை அடுத்த திருவஞ்சேரி கிராமத்தில் செல்வ விநாயகர், சீதா, லஷ்மண அனுமந்த், கோதண்டராம சுவாமி, வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகமும் நடந்தது.இதில், திருவஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, சுவாமியின் அருள் பெற்றனர். விழா பாதுகாப்பு பணியில், ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.